தொடர் விடுமுறை.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்.. அதுவும் இவ்வளவா…!
நாடு முழுவதும் (ஆக.15) இன்று 78 வது சுதந்திர தின் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வியாழக்கிழமை சுதந்திர நாள் விடுமுறை என்பதால் பல நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையுடன் 4 நாள்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது.
இதன்காரணமாக பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கட்டுப்படுத்த கூடுதலாக பேருந்துகள், ரயில்கள் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் விமான நிலையங்களில் கூட்டம் செல்வதால் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
அதன்படி சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063-ல் இருந்து ரூ.11,716 ஆகவும், சென்னை- தூத்துக்குடிக்கு ரூ.4,301-ல்இருந்து ரூ.10,796 ஆகவும்,சென்னை – திருச்சிக்கு ரூ.2,382-ல் இருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை – கோவைக்கு ரூ.3,369-ல் இருந்து ரூ.5,349 ஆகவும், சென்னை – சேலத்துக்கு ரூ.2,715-ல் இருந்து ரூ.8,277 ஆகவும் உயர்ந்துள்ளது.
இருந்தபோதும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் முந்தி அடித்துக்கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்