தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கனமழை..!! குறிப்பிட்ட பகுதிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் இப்போது பரவலாக பெரும்பாலான பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், இது வரும் நாட்களிலும் தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அலர்ட்டையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மி வேகத்தில் வீசக்கூடும்.
மேலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 16ல் நீலகிரி மற்றும் கோவையில் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால்:
நாளை ஆக. 16ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் ஆக. 19 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-பவானி கார்த்திக்