வரலட்சுமி விரதம் செய்ய வேண்டிய முறை..!! விரதம் இருக்க வேண்டிய நேரம்..!! கிடைக்கும் பலன்கள்..!
ஆடிமாதம் என்றாலே அம்மன் தெய்வங்களுக்கு மிகவும் விஷேசமான மாதம்.. அதிலும் ஆடி வெள்ளி மிகவும் விஷேசமான நாள்களில் ஒன்று.. ஆடிமாதாத்தில் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு.., மட்டுமின்றி வரலட்சுமி நோம்பு மிகவும் விஷேசமான நாள்..
வரலட்சுமி நோம்பு :
கடைசி ஆடிவெள்ளியில் கொண்டாடப்படுவதே “வர லட்சுமி நோம்பு” என சொல்லுவார்கள்.. வீட்டில் செல்வம் செழிக்கவும், அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் இந்த வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது.
இந்த பூஜையை திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல திருமணம் ஆகாத பெண்களும் செய்யலாம். அப்படியாக இந்த வரலட்சுமி விரதம் இருப்பதானால் கிடைக்கும் பலன்கள் என்ன..? லட்சுமி தேவியை வழிபடுவதற்கு உகந்த நேரம் என்ன..? வழிபடும் முறை என்ன? என்பது பற்றி இக்குறிப்பில் தெளிவாகப் பார்க்கலாம்..
வரலட்சுமி விரதம் என்றால் என்ன :
இன்று மகாவிஷ்ணுவிற்கு உரிய வளர்பிறை ஏகாதசி விரதம் இருப்பது மற்றொரு தனிச் சிறப்பு ஆகும். இன்றைய நாளில் மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. மூல நட்சத்திரம் என்பத அன்னை சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமாகும். அதனால் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியில் விரதம் இருந்து வழிபட்டால் மூன்று தேவியர்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன் :
இன்றைய நாளில் லட்சுமி தேவியை வழிபடுவதால் செல்வம், செழிப்பு, தைரியம், ஞானம் மற்றும் கருவுறுதல் போன்ற சிறந்த பலன்கள் கிடைக்கும்.. பதினாறு வகை செல்வத்தையும் அளிக்க கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து விரதம் இருப்பதால் தான்.. இந்த விரதத்திற்கு வரலட்சுமி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை கன்னிப் பெண்கள் இருந்தால் மாங்கல்ய வரம் கிடைக்கும், திருமணமனம் ஆகாத பெண்கள் இருந்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் நேரம் :
15 ஆகஸ்ட் 2024 – மாலை 6 மணி முதல் 8 மணி வரை 16 ஆகஸ்ட் 2024 – காலை 6 மணி முதல் 7:20 வரை
வரலட்சுமி பூஜை செய்வதற்கான நேரம் :
16 ஆகஸ்ட் 2024 – காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல அன்று மாலை 6 மணிக்கு மேல்
புனர்பூஜை செய்வதற்கான நேரம் :
17 ஆகஸ்ட் 2024 – காலை 7:35 மணி முதல் 8:55 மணி வரை. அதுபோல் அன்று காலை 10:35 மணி முதல் 12 மணி வரை
18 ஆகஸ்ட் 2024 – காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை. அதுபோல அன்று காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை
லட்சுமி கலசம் & விரதம் முறை :
விரதம் இருக்கும் பக்தர்கள் இன்று அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக தலைக்கு குளித்து, வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி போட்டு கலசம் தயாரித்து அதாவது வரலட்சுமியை அலங்கரிக்க வேண்டும்..
வீட்டிலேயே கலசம் :
ஒரு பெரிய கலச சொம்பிற்கு
சந்தனம் பூசி, பன்னீர் மற்றும் தண்ணீர் ஊற்றி, அதில் குங்குமம் மற்றும் மஞ்சள் கலக்கி, அரிசி, நாணயங்கள், மஞ்சள் மற்றும் இலைகளால் நிரப்ப வேண்டும்.., பின்னர் ஒரு “ஸ்வஸ்திகா” சின்னம் வரையப்பட வேண்டும்..
கடைசியாக, கலசத்தை மா இலைகளால் அலங்கரித்து, மஞ்சள் தடவிய தேங்காயை மூடி வைக்க வேண்டும்.
பிள்ளையாரை வணங்கி, ஸ்லோகங்களைச் சொல்லி, ஆரத்தி செய்து, தெய்வத்திற்கு இனிப்புகளை வழங்கி பூஜையை தொடங்க வேண்டும். பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் இழைகளைக் கட்டிக்கொண்டு பூஜையை தொடங்கலாம்..
ஒரு வாழை இலையில், பச்சரிசி, பொங்கல் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் நிவேதமாக படைக்க வேண்டும்..
பின் நாளை பூஜைகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்ற வேண்டும். வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
மேலும் கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன் கொடுக்கும். இந்த பூஜையை இன்று காலை 10.20 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். வரலட்சுமி பூஜையை செய்து முடித்த பின் திருமணம் ஆன பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..