சுவையான செட்டிநாடு காரகுழம்பு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்
வெந்தயம் அரை ஸ்பூன்
கடலைபருப்பு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
மல்லி ஒரு ஸ்பூன்
அரிசி ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
சோம்பு ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
காய்ந்த மிளகாய் இரண்டு
பூண்டு 10 பற்கள்
சின்ன வெங்காயம் எட்டு
தேங்காய் கால் கப்
சாம்பார் பவுடர் ஒரு ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
குழம்பிற்கு:
கத்தரிக்காய் 8
பூண்டு 6
சின்ன வெங்காயம் கைப்பிடி
முருங்கைக்காய் 1
தக்காளி 2
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்பூன்
பூண்டு 4
சின்ன வெங்காயம் 4
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து அதில் வெந்தயம் அரை ஸ்பூன், ஒரு ஸ்பூன் கடலை பருபு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் மல்லி, ஒரு ஸ்பூன் சீரகம்,ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அதனை இரு மிக்ஸியில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே ஃபேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு 10 பற்கள், கறிவேப்பிலை சிறிது, சின்ன வெங்காயம் எட்டு, தேங்காய் கால் கப், சாம்பார் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கி அதையும் அதே மிக்ஸியில் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் நீளவாக்கில் நடுவில் மட்டும் வெட்டிய முழு கத்தரிக்காய் , பூண்டு 6 பற்கள், சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி, நறுக்கிய ஒரு முருங்கை, இரண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து அனைத்தையும் நன்றாக சாப்டாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், புளிக்கரைசல் நீர் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கிளறி கொதிக்க வைக்கவும்.
ஒரு ஃபேனில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, பூண்டு 4 பற்கள், சின்ன வெங்காயம் 4, கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தாளித்தவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு காரகுழம்பு தயார்.