குழந்தையை விற்ற தாய்.. பிரிய மனம் இல்லாமல் காவல்நிலையத்தில் செய்த செயல்..!
சென்னை வியசார்பாடி பகுதியை சேரந்த தம்பதியினர் சத்தியதாஸ்-ஷியாமளா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஷியாமளா மூன்றாவதாக கர்பமாக இருந்தார்.
இந்தநிலையில் சத்தியதாஸின் நண்பரான என்னூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குழந்தை பிறந்த உடன் தன்னிடம் கொடுக்குமாறும் அதற்காக 2 லட்சமும் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு தம்பதியினரும் சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து குழந்தை பிறப்பதற்கு முன்பே கணேஷிடம் இருந்து முன்பணமாக 25 ஆயிரம் வாங்கியுள்ளனர்.
இந்தநிலையில் ஷியாமளாக்கு கடந்த 8 நட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த கணேஷ் குழந்தை பிறந்து எட்டு நாட்களே ஆன நிலையில் எஞ்சிய பணத்தை கொடுத்து குழந்தையை வாக்கியுள்ளார்.
அதன்பிறகு இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்ததால் அதனை பிரிய மனமில்லாமல் தாய் ஷியாமளா தவித்துள்ளார். இதனால் காவல்நிலையத்திற்கு சென்ற ஷியாமளா கணேஷ் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேஷிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்