வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தலின் படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அணைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கிலும், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டறியும் நோக்கத்திலும் வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்று வருகிறது என்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.