விசிக தலைவர் திருமவளாவான் பிறந்தநாள்..!! தலைவர்கள் வாழ்த்து..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார். தொடர்ந்து, தாயாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் திருமாவளவனுக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கால் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து :
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆகஸ்ட் 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
அதில், சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமாவளவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள். நமது நாட்டின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும், நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன். என இவ்வாறே பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..