நேற்று கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. பல திருப்பங்களை உடைய இந்த போட்டியின் இறுதியில் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைபற்றி அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு மகுடம் சூட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய உலக கோப்பை போட்டியான கால்பந்து உலககோப்பையின் இறுதி போட்டி நேற்று நடந்தது. 2018ம் ஆண்டு கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி மற்றும் 36 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகளும் களத்தில் இறங்கினர். போட்டி தொடங்கிய முதலே அர்ஜெடினா அணி தனது ஆதிக்கத்தை நிலை நிருத்து பிரான்ஸ் அணிக்கு கடும் போட்டியாக இருந்தனர். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸியும், 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும் கோல் அடித்து பிரான்ஸ் அணியை 2-0 என்று முன்னிலை அடைந்தனர்.
ஆட்டத்தில் 75 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா அணி தனது அசாத்திய ஆட்டத்தால் பிரான்ஸ் அணியை திணர வைத்து வந்தனர். வெறும் 10 நிமிடங்கள் பந்தை தடுத்தால் கோப்பை என்ற தருணத்தில், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி முறையில் 80வது நிமிடத்தில் அந்த அணியின் இளம் நட்சத்திர வீரர் எம்பாபே பிரான்ஸ் காக முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து மீண்டும் எம்பாபே 81 வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்து போட்டியை 2-2 என்று போட்டியை சம அளவுக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது அதிலும் மெஸ்ஸி ஓர் கோலை அடிக்க அதனை முறியடிக்கும் வகையில் மீண்டும் எம்பாபே ஒரு கோல் அடித்து போட்டியை நீடிக்க வைத்தார்.
இரு அணிகளும் முன்னிலை பெறாததால், போட்டி பெனால்டி ஷூட் அவுட் சுற்றிற்கு சென்றது அதில் 4-2 என்ற கொல் வித்தியாசத்தில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை வீழ்த்தி தனது 36 ஆண்டு கால கனவை நனவாக்கியது. கோப்பையை பெற்ற மெஸ்ஸி மீண்டும் தனது நாட்டிற்காக விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அர்ஜென்டினா அணியின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல முக்கிய உலக பிரபலங்கள் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியின் போது 25 ஆண்டுகால கூகுல் தேடலில் இது வரை இப்படு ஒரு தேடல் நடந்ததே இல்லை என்றும் உலகம் முழுவதும் ஒரே நிகழவை மட்டுமே தேடியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் ஒரு வினாடிக்கு 24000 டிவீட்கள் பகிரப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை செயலாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.