மதுபோதை மோகம்.. மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!! பரபரப்பான தருமபுரி ..!!
தருமபுரி குமாரசாமிபேட்டை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் திருப்பனியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் சரமாரி வெட்டி விட்டு கருவறைக்குள் நுழைந்து பூட்டி கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு.
தருமபுரி நகரில் உள்ள குமாரசாமிபேட்டையில் உள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. இன்று காலை வழக்கம் போல் கோயில் நடை திறந்து ஊழியர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர்..
அப்போது ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ராஜேஸ்வரி(55) என்ற மூதாட்டி கோயிலுக்குள் தூய்மை பணியில் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று காவலர்கள் அணியும் காக்கிச்சட்டை அணிந்த இளைஞர் பெரிய கத்தியுடன் கோயிலுக்குள் நுழைந்து வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரியை திடீரென கத்தியால் தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட 13 இடங்களில் வெட்டி உள்ளார். இதில் சற்றும் எதிர்பாராத ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று பார்த்த பொழுது கத்தியை காட்டி அனைவரையும் துரத்தி உள்ளார். அனைவரும் பயந்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். கூட்டமாக வந்த பொது மக்களை பார்த்து திடீரென ஓடிய அந்த இளைஞர் கோயிலில் கருவறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தியர். உடனடியாக ஊழியர்கள் தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிலின் கருவறையில் இருந்த இளைஞரை அவரை லாபமாக பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சித்தி விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது. இவர் தலைமை காவலர் உடையில் கத்தியுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. மேலும் இவர் போதையில் இருந்துள்ளார். இவர் வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா எதற்காக கோயிலில் சென்று மூதாட்டியை வெட்டியுள்ளார். என்பதை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் பிரசித்தி பெற்ற கோயிலில் கத்தியுடன் சென்று மூதாட்டியை வெட்டிய சம்பவம் குமாரசாமிபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..