தோசை மாவு காலியா? அப்போ இத செய்ங்க..!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு ஒரு கப்
ரவா அரை கப்
தயிர் ஒரு கப்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
எண்ணெய் தேவையானது
சீரகம்
வெங்காயம்
பச்சை மிளகாய்
கேரட்
குடைமிளகாய்
தக்காளி
இட்லி பொடி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு, அரை கப் ரவா, ஒரு கப் தயிர், உப்பு சிறிது சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஊத்தப்பம் வார்த்துக் கொள்ள வேண்டும்.
சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி அதனை ஊத்தப்பம் மேலே தூவி விட வேண்டும்.
பின் ஊத்தப்பம் சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
கடைசியாக ஊத்தப்பம் மேல் இட்லி பொடி தூவி விட வேண்டும். இது ரொம்ப ருசியாக இருக்கும்.
இத்துடன் சாம்பார், கார சட்னி சாப்பிட சுவையாக இருக்கும்.