ஒரே நேரத்தில் 10 கிராம தெய்வங்களுக்கு அபிவிருந்தி யாகம்..!!
சின்ன குளம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி., ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலய திருக்குளத்தில் பத்து திருக்கோவில்களின் மாபெரும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலய திருக்குளத்தில் பத்து கோவில்களின் மாபெரும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் இருந்து அம்மன் சிலைகளை அலங்கரித்து பூஜைகள் செய்து மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டார்கள்.. மேலும் 10 திருக்கோவில் சுவாமிகள் ஒன்று சேர்ந்து இந்த திருக்குளத்தில் முதல் சுற்றி ஸ்ரீ விநாயகர ஆலயம் இரண்டாம் சுற்றில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் மூன்றாம் சுற்றில் ஸ்ரீ சக்தி சீரடி சாய்பாபா ஆலயம் என பத்து சுற்று வரை பல்வேறு சுவாமிகளின் ஆலய உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஓமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ கங்காதேவி பூஜை, மற்றும் உலக நன்மைக்காக நலன் வேண்டி அபிவிருந்தி யாகம் நடைபெற்றது. இந்த பத்து திருக்கோவிலின் தெப்ப உற்சவம் அதி விமர்சையாக ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.. அதன் பின்னரே அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அபிவிருந்தி யாகம் நடத்தப்பட்டது..
இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் தெப்ப உற்சவத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..