தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்..!!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து 10,000 பயனாளிகள் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்…
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்…
“தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை, விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது….
முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை இன்று மேம்படுத்தி அதற்கான புதிய கட்டிடங்களை தந்து அதிகளவில் படுக்கை வசதிகளை தந்து இன்று பிரம்மாண்ட மருத்துவ கட்டமைப்பாக ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்…
உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது, ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சர் நட்டா இந்தியாவில் குரங்கமை இல்லை என்று அறிவித்திருக்கிறார், தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை, தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்,
யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள், பயணிகளுக்கு விழிப்புணர்வு சூப்பராகைகளை வைக்க சொல்லி உள்ளோம், நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்.. என்று கூறியுள்ளர்.
-பவானி கார்த்திக்