ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து..!! ஆர்த்தி சொன்ன பதில்..!! வைரலாகும் ட்விட்..!!
ஜெயம் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பிறகு, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால், சமீப காலங்களாக, இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள், பெரிய வெற்றியை பெறாமலே இருந்து வருகிறது. இந்த சோகத்துக்கு மத்தியில், இவரது வாழ்க்கையில் பெரிய அடி ஒன்றும் விழுந்தது.
அதாவது, ஜெயம் ரவிக்கும், அவரது மனைவிக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படியும் கூறினர். இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியை திருமணம் செய்திருக்கிறேன் என்பதையும் அவர் நீக்கவில்லை. அதேபோல் தனது பெயரிலிருந்தும் ரவியை நீக்கவில்லை.
இதனை கவனித்த ரசிகர்கள், தனக்கும் ஜெயம் ரவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை, விவாகரத்தும் இல்லை என்பதை ஆர்த்தி உறுதி செய்திருப்பதாக மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.
-பவானி கார்த்திக்