“காந்தி பெயர் ஏன் வெச்சீங்க” – சீரியஸ் ஆன வெங்கட் பிரபு!
தி கோட்:
தளபதி விஜய் தற்போது தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும், அரசியல் த்ரில்லர் படத்தில், விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு:
தி கோட் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்துக் கொண்டனர்.
அப்போது, தளபதி விஜயின் கதாபாத்திரத்துக்கு காந்தி என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், சாராயம் குடிப்பது போல் காட்சிப்படுத்தியுள்ளீர்களே என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, காந்தி என்று பெயர் வைத்தால், குடிக்கக் கூடாதா? என் நெருங்கிய நண்பரின் பெயரும் காந்தி தான். ஆனால், அவன் செய்யாத காரியமே இல்லை என்று நகைச்சுவையாக பேசினார்.
-பவானி கார்த்திக்