பாஜக தேவநாதன் யாதவிற்கு சொந்தமான 12 இடங்களில் சோதனை..!! கிடைத்த முக்கிய ஆவணங்கள்..!!
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த “தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டிதருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்..
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சுமார் 525 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்க மறுத்துள்ளது.., வட்டி பணம் மட்டுமின்றி முதலீடு செய்த பணத்தையும் கொடுக்க மறுத்துள்ளது.., அதே சமயம் முதிர்வுத் தொகை கொடுக்கவில்லை என தெரியவந்துள்ளது..
இதனால் பணத்தை இழந்த 144 முதலீட்டாளர்களும் தங்களிடம் 24.50 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறி சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் கடந்த 12-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் நிதி நிறுவன இயக்குநர் குணசீலன, புதுக்கோட்டையில் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின் மகிமை நாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் தேவநாதன் யாதவின் வீடு, தொலைக்காட்சி அலுவலகம் (வின் நியூஸ்), மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர் அதன் ( WIN TV )க்கு சீல் வைத்தனர்.. சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மோசடி தொடர்பான பல முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..