டேஸ்டியான நட்ஸ் பேரீட்சை லட்டு..!
தேவையான பொருட்கள்:
பாதாம் – 1/2 கப்
முந்திரி பருப்பு – 1/2 கப்
பிஸ்தா – 1/4 கப்
வால்நட் – 1/2 கப் (விரும்பினால்)
பேரீட்சைப்பழம் – 25
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலில் அரை கப் பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின் அரை கப் முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும்.
கால் கப் பிஸ்தா சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
பின் கடைசியாக அரை கப் வால்நட் சேர்த்து வறுக்க வேண்டும்.
கடைசியாக 25 பேரீட்சைப்பழம் சேர்த்து வறுக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வறுத்த அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
பின் வறுத்த விதை இல்லாத பேரீட்சைபழம் மிக்ஸியில் சேர்த்து அரைத்து பின் அதில் கொரகொரப்பாக அரைத்த நட்ஸ், ஏலக்காய்த்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
கையில் நெய் தடவி ஒரு கைப்பிடி அரைத்த நட்ஸ் எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அவ்வளவுதான் டேஸ்டியான நட்ஸ் பேரீட்சை லட்டு தயார்.
இத டக்குனு ஈசியா குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் உடலுக்கு இது ஆரோக்கியமாகவும் இருக்கும்.