ஆவின் தொழிற்சாலையில் இளம் பெண் உயிரிழப்பு..!! தொடரும் போலீஸ் விசாரணை..!!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று வழக்கம்போல பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அப்போது பால் உற்பத்தியான பின் பாக்கெட்டில் சீல் செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டுகளை பாக்ஸில் அடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி (வயது 30) என்பவர் அதை செய்துள்ளார்..
அப்போது எதிர்பாராத விதமாக உமாராணியின் புடவை முந்தானை இயந்திரம் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியுள்ளது. அதனால் உமா மகேஸ்வரியின் தலையும் அந்த மோட்டாரில் சிக்கியுள்ளது. இதனால் உமா ராணி மிஷினில் சிக்கி இறந்துள்ளார். இந்த கோர விபத்து ஆவின் தொழிற்சாலைக்குள் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்து காவல்துறையினர், டிஎஸ்பி கந்தன் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன்., உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆவின் தொழிற்சாலையில் உயிரிழந்த உமாராணி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டு கோட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலைகள் நிறுத்தப்பட்டது. மிஷினில் சிக்கி இளம் பெண் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..