உடல் எடை குறைய கட்டாயம் இத ட்ரைப் பண்ணுங்க..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
- உடல் எடையை குறைக்க குடைமிளகாய், முட்டைகோஸ், கேரட், பாகற்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு ஆகிய காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து சமைத்து உண்டுவந்தால் இது உடலின் எடையை குறைக்க உதவும்.
- குறிப்பாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, செல்போன் பார்த்துக் கொண்டே உண்பது மற்றும் புத்தங்கள் வாசித்துக் கொண்டே சாப்பிடுவது போன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும்.
- எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கிழங்கு வகை உணவுகள், ஐஸ்கிரீம், சீஸ், நெய், வெண்ணெய், சர்க்கரையில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- சிறிய தட்டில் உணவினை போட்டு உண்ண வேண்டும். காரணம் பெரிய தட்டில் சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட வாய்ப்பு இருக்கிறது.
- இரண்டு மாதங்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து மென்று சாப்பிட உடலி எடை குறைவதை பார்க்கலாம்.
- தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையாக ஒரு பூண்டை மென்று சாப்பிட வேண்டும். அனைத்து உணவுகளிலும் பூண்டை சேர்த்து சாப்பிட வேண்டும்.
- ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர உடல் எடை கணிசமாக குறையும்.
- சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை நன்றாகவே குறைவதை பார்க்கலாம்.
- சர்கரையில் செய்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.