ராகவேந்திரா சாமிகளின் 353 ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா..!! நடிகர் செந்தில் சாமி தரிசனம்..!!
மதுராந்தகம் அருகே ராகவேந்திரர் சுவாமிகள் பிருந்தாவனத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் தனது துணைவி யாருடன் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தில் இன்று ராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தின் 30ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா மற்றும் மந்திராலயம் மகான் ராகவேந்திரா சாமிகளின் 353 ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா என முப்பெரும் விழா இந்த பிருந்தாவன் ஆலயத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பகல் இரண்டு மணி வரை விழா நடைபெறுகிறது..
காலை 11.30 அளவில் மகா மங்கள ஆராதனை சுவாமிகள் யோகி ரகோத்தமா சித்தர் அவர்கள் ஆராதனை செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது துணைவியார் உடன் கலந்து கொண்டு யோகி ரகோத்தமா சித்தர் சாமிகளிடம் ஆசிய பெற்றார்..
பிறகு அவர் கூறியதாவது என் குடும்பத்தில் பல பிரச்சனைகள் மன அழுத்தங்கள் இருந்தன சித்தர் முகத்தில் தெய்வீக தன்மை உள்ளதை உணர்ந்தேன் இவை யாவும் இங்கு வந்து சென்ற பிறகு ஒரு நல்ல தீர்வும் மண நிம்மதியும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சினிமா துறை குறித்தும் அரசியல் குறித்தும் கேள்வி கேட்டதற்கு பதில் தர மறுத்து விட்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..