நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்..!! வந்த மிரட்டல்..!
மும்பையில் இருந்து கேரளா திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக விமானி தெரிவித்துள்ளார். அதையடுத்து காலை 7.36 மணி அளவில் பறந்து கொண்டிருந்த விமானம் மீண்டும் அதே விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது..
தரையிறக்கப்பட்ட பின் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. அதனை தொடர்ந்து காலை 8.44மணிக்கு மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு மீட்பு படையினர் ( Bomp Squad ) முழுவதுமாக சோதனை பணியில் ஈடுபட்டனர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் வெடிகுண்டு கிடைக்காததால் வந்த மிரட்டல் பொய்யானது என தெரியவந்தது..
அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏர் இந்தியா விமானம், தற்போது விமான நிலையம் எப்போதும் போல செயல்பட்டு வருகிறது.. அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..