“கமலா ஹாரிஸ் ஒரு சுயாதீன தலைவர்..” மல்லிகா ஷெராவத் பேட்டி..!!
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டி போவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே., அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன் பின் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாக இருந்துள்ளது..
இந்நிலையில் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுக்க அனைவரும் தயாராக வேண்டும். என கூறியுள்ளார்…
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அதிபராக கமலா ஹரிஸ் இருப்பார்.
இப்போதே கமலா ஹரிஸ் மீது உலகத் தலைவர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை உள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க, டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். அதற்கு, கமலா ஹாரிஸை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.. என ஜோ பைடன் பேசியது பேசு பொருளாகியது.
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் முன்னரே தனது சமூக வலைதள பக்கத்தில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..