“இது என் உச்சபட்ச கண்ணீர்” – வாழை குறித்து மாரி செல்வராஜ்!
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த துயரத்தை அடிப்படையாக கொண்டு வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் அன்பின் வணக்கம். இன்று என் 4-வது படமான வாழை வெளியாகிறது.
என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும் அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இவரது இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
-பவானி கார்த்திக்