12-ஆம் வகுப்பு சிறுமி… பள்ளியில் அரங்கேறிய கொடூரம்.. திவீர விசாரணயில் போலீஸ்..!
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரும், அதே பள்ளியில் படித்து வந்த சிறுவனும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது இந்த காதல், மிகவும் நெருக்கமாக மாறிய நிலையில், அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதன் விளைவாக, அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர், இதுகுறித்து மருத்துவர்கள் சார்பில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், மாணவியின் நலன் கருதி, கருவை கலைக்க வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மாணவனை கைது செய்தனர்.
மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில், வேறு சில மாணவிகளுக்கும் அவன் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.
-பவானி கார்த்திக்