கார்த்திகை நாளில் முருகனுக்கு பிடித்த திருபாகம் ஸ்வீட்..!
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு ஒரு டம்ளர்
- சர்க்கரை ஒன்றரை டம்ளர்
- நெய் ஒன்றரை டம்ளர்
- குங்குமப் பூ சிறிது
- முந்திரி பருப்பு பவுடர் ஒரு டம்ளர்
- பால் இரண்டு டம்ளர்
செய்முறை:
முதலில் ஜல்லடையில் ஒரு டம்ளர் கடலை மாவை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சிய இரண்டு ஸ்பூன் பாலில் சிறிது குங்குமபூ சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை சூடாக்கி அதில் சலித்த கடலை மாவை சேர்த்து நிறம் மாறாமல் அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும்.
பின் மாவை நன்றாக ஆறவைத்து அதில் இரண்டு டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து கிளறவும்.
கரண்டியை கொண்டு கடலை மாவை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் இந்த கலவையை ஊற்றி மிதமான தீயில் அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த கலவை நன்றாக கெட்டியானதும் ஒன்றரை டம்ளர் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
பின் ஊறவைத்த குங்குமபூ சேர்த்து கிளறவும்.
பின் கால் டம்ளர் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அடுத்து ஒரு டம்ளர் முந்திரி பருப்பு பவுடர் சேர்த்து இதோடு கால் டம்ளர் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அனைத்தும் நன்றாக திரண்டு வந்து மஞ்சள் நிற கேசரி போல தெரியும்.
கடைசியில் கால் டம்ளர் நெய் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்களுக்கு கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் திருபாகம் ஸ்வீட் தயார், இந்த கார்த்திகை நாளில் முருகருக்கு பிடித்த திருபாகம் செய்து ஸ்வாமிக்கு படைங்க…