மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் பரிசு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பொருட்களுடன் 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் ஆண்டிற்கான பொங்கல் பரிசு பட்டியலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பதினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் அதே நாளில் அந்ததந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுகளால் தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.