தீராத விளையாட்டு பையன்… ஆக்ஷன் ஹீரோ விஷால் 47..!
விஷால்:
தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, ஜானகி தேவி தம்பதியினரின் மகன் நடிகர் விஷால். தமிழ் திரையில் அறிமுகமாவத்திற்கு முன்பு நடிகர் அர்ஜீனிடம் உதவி இயக்குநராக பணிபரிந்தார். அதன் பிறகே 2004ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தில் நடித்தார். முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து சண்டைகோழி,திமிரு, போன்ற திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக களமிரங்கினார்.
தீராத விளையாட்டு பையன்:
தனக்கு ஆக்ஷன் படமே செட் ஆகும் என நினைத்த விஷால், பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து சூப்பட் ஹிட் கொடுத்தார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிளே பாயாக இருந்த விஷால், பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் பெண் சுபாவம் கொண்ட முற்றிலும் வேறொரு கேரக்டராக மாறி ரசிகர்களை கவர்ந்தார்.
பன்முகம் கொண்டவர்:
பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் விஷால் தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
கடின உழைப்பின் நாயகன்:
விஷாலின் இயல்பான உயரமும், கட்டுக்கோப்பான உடலமைப்பும் அவற்றைத் தாண்டி அவர் செலுத்தும் அபார உழைப்பும் அவர் நடிக்கும் சண்டைக்காட்சிகளையும் மாஸ் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ள விஷால் தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.