பீகாரில் செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பீகாரில் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம் ராம்கர்வா பகுதில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் செங்கலை சுடுவதற்காக தொழிலாளர்கள் அதனை அடுக்கி வைத்து பின்னர் தீவைத்துள்ளனர். அதன் பின்னர்தீ வைத்துவிட்டு அதை கவனிக்க அருகில் மக்கள் கூடியுள்ளனர்.அந்நேரத்தில், அங்கிருந்த பிரமாண்ட புகை போக்கி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
அதன் அருகில் வேலைபார்த்துக் கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயம் அடைந்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பீகார் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.