கேரவனில் ரகசிய கேமரா.. ஹோட்டலில் ஆடையை மாற்றினேன்.. பகீர் கிளப்பிய ராதிகா..!
80களின் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் ஒருவர் நடிகை ராதிகா. 0களின் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் ஒருவர் நடிகை ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார்.
இந்தநிலையில் நடிகை ராதிகா கேரள சினிமா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் மூலம், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், கேரள சினிமா உலகில், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, கூறப்பட்டிருந்தது.
இது, கேரளா மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியா முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கேரளா சினிமா உலகில், தான் பார்த்த சில அதிர்ச்சி தகவல்களை நடிகை ராதிகா கூறியுள்ளார்.
அதில், “கேரள திரையுலகில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளை நிர்வாண காட்சிகளை பதிவு செய்கின்றனர். அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில், நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து போனில் பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.
இதனால் பயந்து போய் நான் ஹோட்டலில் அறை எடுத்து ஆடையை மாற்றி உள்ளேன்” என்று ராதிகா பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.