செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 புதிய வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் ..!
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா. உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவை சேர்ந்த பலரும், வேலை வாய்ப்புக்காக, அமெரிக்க நாட்டிற்கு தான் குடி பெயர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 27-ஆம் தேதி அன்று, அமெரிக்காவிற்கு சென்றிருந்ததார். 17 நாட்கள் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ள அவர், பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சான் ஃபிரான்சிஸ்கோவில் இன்னொரு வெற்றிகரமான நாள் என்றும், Ohmium என்ற நிறுவனத்திடம் இருந்து, 400 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை தக்கவைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதன்மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இது பசுமை எரிசக்தி உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்