அரசு கல்லூரி கழிவறையில் படையெடுத்த பாம்புகள்..!! பரபரப்பான திருவண்ணாமலை..!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆற்காடு செல்லும் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் 4500 பெண் மாணவர்களும் 4000ஆண் மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பகல் நேரம் மட்டுமின்றி பார்ட் டைம் படிப்பு அதாவது மாலை நேரத்திலும் மாணவர்கள் படித்து வருகின்றனர்..
இந்நிலையில் இந்த அரசுக்கல்லூரியில் சுகாதரமற்ற முறையில் இருப்பதால் அங்கு துர்நாற்றம் மட்டுமின்றி பூச்சிகளும் சுற்றி வந்துள்ளது.. இதனால் அந்த கழிவறைக்கு செல்லவே மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்வதாக சொல்லப்படுகிறது. ஒரு சில சமயங்களில் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் உண்டு..
இப்படியாக நேற்று மாணவிகள் கழிவறைக்குள் பாம்புகள் சுற்றி திரிந்து படையெடுத்துள்ளது.., இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.. ஆனால் அதுபற்றி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கழிவறையின் கதவின் மேல் “இங்கு பாம்புகள் உலா வருவதால் யாரும் செல்ல வேண்டாம்” என ஒரு பேப்பரில் எழுதி அதனை கதவின் மேல் ஒட்டியுள்ளனர்..
இதனை மாணவி ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..