சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சீமான்..!! போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டிருந்தது., இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரி சில முக்கிய ஆவணங்களை கலெக்ட் செய்து சம்மன் அனுப்பி அவரை கைது செய்யப்போவதாக போலீஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது..
நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் போது மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அவதூறாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.. அதற்காக சாட்டை துரை முருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்., கலைஞர் பற்றி அவதூறாக பேசியதுடன்., முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என தமிழக அரசிற்கு சவால் விட்டுள்ளார்.. அதன் படி அஜேஷ் என்பர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஆவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்..
அந்த வழக்கானது பட்டாபிராம் உதவி காவல் ஆணையர் சுரேஷ் குமாரிடம் மாற்றப்பட்டது., இந்த வழக்கை அவர் கையில் எடுக்க ஆரம்பித்தில் இருந்தே விசாரணையானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது., அதாவது காவல் ஆணையர் சுரேஷ் சீமானுக்கு எதிரான ஆதரங்களை பெற்று அதனை ஆவணமாக சமிட் செய்து சீமானுக்கு சம்மன் அனுப்படும் எனவும் அவரிடம் கட்டாயம் விசாரணை நடத்தப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்..
அதே சமயம் இந்த விசாரணையானது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படுமா அல்லது சீமானின் வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..