மக்களின் நிலையை புரிந்த கொண்ட மதிமுக..!! உற்சாகத்தில் மக்கள்..!!
திருப்பூரில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பயணிகள் நிழற்குடையை அமைத்துக் கொடுத்த மதிமுக மாமன்ற உறுப்பினர்…
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை இருபதாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி சாந்தி தியேட்டர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை இந்நிலையில் அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை வேண்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில்
அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் குமார் வடக்கு சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி கோரிக்கை மனுவை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பயணிகள் நிழற்குடையை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் 20 வது வார்டு மாமன் என்ற உறுப்பினர் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 15 ஆண்டு காலத்திற்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் நிழற்குடை அமைத்துத் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கும் மாமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..