டேஸ்ட் அட்லஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டிற்கான சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளில் இத்தாலி நாட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் 50 நாடுகள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பயண வழிகாட்டி தளமான டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள சிறந்த உணவுகளையும், சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டிய்லியும் வெளியிடுவது வழக்கம். இதனால் இந்த ஆண்டிற்கான பட்டியலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து. அதில், 50 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் உலகத்தின் சிறந்த உணவுகளை கொண்ட நாடாக இத்தாலி நாடு முதலிடம் பிடித்துள்ளது.
What’s your favorite dish in the world?
Full top 100 best dishes in 2022: https://t.co/TVbd3jHohu pic.twitter.com/28jJDn0kmx— TasteAtlas (@TasteAtlas) December 23, 2022
மேலும், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜப்பான் நாட்டிற்கு 4வது இடமும் அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு 5 வது இடமும் கிடைத்துள்ளது. டேஸ்ட் அட்லஸின் இந்த பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.