29 Total Views , 1 Views Today
தக்காளியை அதிகமாக சாப்பிடுரீங்களா..?
தக்காளியை கால் வலி, மூட்டு வலி ஆகிய பிரச்சனைகளை உடையவர்கள் அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
தக்காளியை அதிகமாக சாப்பிடுவதினால் ஆக்சலேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் எண்ணிக்கை உடலில் அதிகமாகி இது சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கும்.
தக்காளியில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் உடலில் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகிய பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும்.
தக்காளியில் இருக்கும் ஹிஸ்டமைன் என்னும் பொருளை உள்ளடக்கியதால் சளி, இருமல், தும்மல் ஆகிய பிரச்சனைகளை உடையவர்கள் சாப்பிடுதல் கூடாது.
உடலில் அலர்ஜி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உடையவர்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும்.
தக்காளியில் அதிகமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும் இதனை அதிகமாக கர்பிணி பெண்கள் சாப்பிடுதல் கூடாது.