386 நல்லாசிரியர் விருது..!! ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை..!! அமைச்சர் உதயநிதி அளித்த உறுதி..?
இந்தியா முழுவதும் நேற்று ஆசிரியர் தினமானது கொண்டாடப்பட்டது.. கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய நல்லாசிரியர்களை கவுரவிக்கும் விதமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வண்டலூரில் உள்ள பி.எஸ் அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 386 நல்லாசாரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இருந்தார்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி :
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., “இன்று இஸ்ரோவில் பணிபுரியும் அறிவியல் அறிஞர்கள் முதல் மருத்துவர்கள்., பொறியாளர்கள் என பலரும் முன்னேறி செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தி செல்வது ஆசிரியர்கள் மட்டுமே.. இன்று அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்லும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும்.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்.
ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு., முதலமைச்சரின் தனி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.., அதனை பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆசிரியர்கள் கோரிக்கைளை விரைவில் நிறைவேற்றி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்..
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், எழிலரசன், சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்க மாநிலதலைவர் கு.தியாகராஜன், திருக்கழுக்குன்றம் ஒன்றியகுழு தலைவர் ஆர்.டி. அரசு, மாவட்ட ஊராட்சிக குழுதலைவர் செம்பருத்தி துர்கேஷ், துணைத்தலைவர் காயத்திரி அன்புச்செழியன் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு “நல்லாசிரியர்” விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநில நல்லாசிரியர் விருதை பெறுவதற்கான விண்ணப்பம் ஆனது பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் சர்குலர் (Circular) அனுப்பப்பட்டிருந்தது.. அதற்கான, இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் 29 வரை நடைபெற்றது. மேலும் எமிஸ் தளம் வழியாக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 342 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேர் என்று மொத்தம் 386 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.
தகுதி பெற்ற 386 நல்லாசிரியர்களுக்கு வெள்ளி மெடல்., பாராட்டு சான்றிதழ் மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..