இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?
உடல் எடையை குறைக்க மோருடன் கேரட் சேர்த்து அரைத்து குடித்து வரலாம்.
பள்ளிபாளையம் சிக்கன் செய்யும்போது நீளமான மிளகாய்க்கு பதிலாக குண்டு மிளகாய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பால் பாயாசத்தில் பாதாம் பருப்பை அரைத்து சேர்த்து செய்தால் பாயாசம் கூடுதல் சுவையாக இருக்கும்.
பற்களுக்கு வலிமை சேர்க்க செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை பொங்களுக்கு பாசிப்பயிறை லேசாக வறுத்து பின் பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.
ஏலக்காய் பொடியாக அரைக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து அரைக்க சுலமாக அரைக்கலாம்.
உடலில் எடை குறைவதற்கும் சளி, இருமல் ஆகியவற்றிற்கும் அடிக்கடி கொள்ளு ரசம் குடித்து வரலாம்.
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் சரியாகும்.
பால் பொங்கல் செய்யும்போது சர்க்கரைக்கு பதில் கற்கண்டு சேர்த்து செய்து வர சுவை அருமையாக இருக்கும்.