விநாயகர் சதுர்த்திக்காக இஸ்லாமியர்கள் செய்த செயல்.. குவியும் பாராட்டுகள்..!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடபடுகிறது. இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும்.
வீட்டில் இதற்கான விசேஷமாக பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களை சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கும்.
மற்றொரு பக்கம் அவரவர் வசிக்கும் தெரு அல்லது குழுவாக சேர்ந்து விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவார்கள். அப்படியாக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு விதமான விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, மிலாடிநபி குழு இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு வீடு வீடாக சென்று விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வழங்கியுள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்களுக்குக்கு மதிய உணவையும் வழங்கி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.