வசமாக சிக்கிய மகாவிஷ்ணு..!! 5 வழக்குகள் பதிவு..!!
மாற்றுதிறனாளிகள் குறித்து மகாவிஷ்ணு பேசியது தற்போது காட்டு தீயாக பரவி வருகிறது.. நேற்று விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
மேடைபேச்சாளர் மகாவிஷ்ணு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக சென்றுள்ளார் அப்போது.. அவர் பேசியதாவது “கடந்த ஜென்மத்தில் அவரவர் செய்யும் பாவங்களை பொறுத்தே இந்த ஜென்மத்தில் ஊனமுற்றோராக பிறக்கிறார்கள்.. உங்கள் மனதில் பாரம் இருக்கிறதா..? மனம் அழுத்தம் உள்ளதா என கேட்டுள்ளார்.. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.. அப்போது அங்கிருந்த மாற்றுதிறனாளி தமிழ் ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணு ஒரு அறிவற்றவர் என சொல்லி வாக்குவாதம் ஏற்பட்டது…
அதன் பின் அவரை எப்படி அவ்வாறு பேச அழைக்கலாம் என பள்ளிக்கல்விதுறை கேள்வி எழுப்பி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசியை திருவள்ளூர் அரசு பள்ளிக்கு மாற்றும் செய்தது..
அதன்பின் மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர் மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளனர்.. அந்த புகாரின் பேரில் இன்று அஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவை காவலர்கள் கைது செய்துள்ளனர்…
தற்போது வரை மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு.. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டமான 92 ஏ என்ற பிரிவின் கீழும் மகாவிஷ்ணு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தை தூண்டுதல், இரு குழுக்கள் இடையே மோதலை தூண்டுதல், குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் இழிவுபடுத்துதல், தவறான தகவலை பரப்புதல், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகா விஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மகாவிஷ்ணுவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், இதேபோன்று நான் பல இடங்களில் பேசியுள்ளேன். என் பேச்சு தவறுதாலக புரிந்துகொள்ளப்பட்டது. மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலேயே நான் பேசினே என்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..