அமெரிக்காவில் இருந்தே முதலமைச்சர் போட்ட ஆர்டர்..!! அசெம்பிள் ஆன நிர்வாகிகள்..!!
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்த படியே காணொளிக் காட்சி வாயிலாக திமுக தேர்தல் ஒழுங்கிணைப்புக் குழுவுடன் நேற்று ஆலோசனை செய்தார்.. மேலும் திமுகவின் முப்பெரும் விழா குறித்தும், கொடியேற்றம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்து திமுக நிர்வாகிகளுக்கு சில கட்டளைகளை விதித்துள்ளார்..
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக சொல்லியதை போல 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் அதற்காக நாம் இப்போதில் இருந்தே உழைக்க வேண்டும். அதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்..
வருகின்ற 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணிகள் முதல் நடத்தி முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிப்பதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவின் முக்கிய பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகிய 5பேரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழு அமைக்கப்பட்ட பின் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாறுதல்கள் பற்றியும்., கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் பற்றியும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது..
அதனை மேற்கொள்வதற்காக நேற்று இரவு தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன், அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.. அதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
காணொளிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட அந்த ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்., தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் சென்று இருப்பதால்., அங்கு முதலீட்டாளர்களுடனான ஆலோசனை கூட்டமும் வீடியோ கால் மூலம் ஒருங்கிணைப்பு குழுவுடனும் ஆலோசனை நடத்தினார்.. இக்குழுவில் இதுவரை பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில் கட்சி நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது..
காணொளி காட்சி மூலம் திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தும், பவளவிழா ஏற்பாடுகள் குறித்தும், மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள பொது உறுப்பினர் கூட்டங்கள் பற்றியும், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த பல்வேறு நிகழ்வுகள் சொன்னதை போல நடத்தப்பட்டு வருகிறதா என கேட்டறிந்தார்.. மேலும், திமுக பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள்- அலுவலகங்கள்- வணிக வளாகங்களில் திமுக கொடிகளைப் பறக்கவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சர் தாயகம் திரும்பும் போது திமுகவில் செய்யபட்டுள்ள மாற்றங்கள் பற்றிய பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் செய்ய போகும் வேலைகள் பற்றியும்., திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்து வருவதாகவும் அதன் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..