மகளிர் உரிமை தொகை… இனிமேல் இவர்களுக்கும்.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான நிபந்தனைகளை அரசு தளர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர்களுக்கான மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் திமுக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டதால் சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னரே தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கில் 1000ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் புதிய பயணாளர்களை சேர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தியுள்ளது. அதாவது முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இத்திட்டத்தில் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது. இதன் மூலம் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 தேதிகளில் வங்கி கணக்கில் 1000-ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.