சீனாவில் கால்பதிக்கும் அதானிக்குழு..!! கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்..!!
அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் சீனாவுக்கு க்ளீன் சிட் அளித்துள்ளது அதானி குழுமத்துக்கான ஆதரவு கடிதமே என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கௌதம் அதானியின் அதானி குழுமத்திற்கு சொந்தமான “ஏயிஆர்சில்” நிறுவனத்தை சீனாவில் தொடங்கியுள்ளது சீனாவில் இந்த கம்பெனியானது (அதானி எனர்ஜி ரிசோர்சஸ் ஷாங்காய்) என்ற கம்பெனி துணை நிறுவனத்தை தற்போது துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் சீனாவில் கிடைக்கும் பொருட்களை பிற நாட்டில் விநியோகபதற்கான தீர்வுகளையும் திட்ட மேலாண்மை சேவைகளையும் தருவதற்காக நிறுவப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..
அது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. அதில் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அதானி எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனம் செப்டம்பர் 2ஆம் தேதி அன்று ஷாங்காயில் சீன நிறுவன சட்டத்தின் கீழ் செயல்பட தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த சில ஆண்டுகளாக அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைள் நமது தேசத்தின் பாதுகாப்பை குறைமதிப்பீடு செய்வதுடன், இந்தியாவுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நலன்களை அதானி குழுமத்தின் வணிக நலன்களுக்காக விட்டுக்கொடுப்படு உலக அளவில் இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்..
பிரதமர் மோடி – அதானியின் சிறப்பு நடப்புக்காக இந்தியா ஏற்கெனவே உள்ளூர் மற்றும் உலக அளவில் பல தியாகங்களைச் செய்துள்ளது எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் சீனாவில் விநியோக சங்கிலிக்கு தீர்வு காண்பதற்கும், திட்டச் சேவைகளை நிர்வகிப்பதற்கும் சீனாவில் ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியிருப்பதாக வந்த செய்தியினைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷின் இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிட்த்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..