செம்ம டேஸ்டில் எஃக் வடை செய்யலாமா..!
நாம் பலவிதமான பொருட்களில் வடை செய்து சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் இப்படி முட்டை பயன்படுத்தி இன்னிக்கு வடை செய்து பாருங்க நீங்களே அசந்து போய்டுவீங்க.
தேவையான பொருட்கள்:
- ஐந்து முட்டை ( வேகவைத்தது 4)
- ஒரு பெரிய வெங்காயம்
- இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- அரை டீஸ்பூன் சீரகத்தூள்
- அரை டீஸ்பூன் கரம் மசாலா
- ஒரு துண்டு இஞ்சி
- கருவேப்பிலை
- இரண்டு பச்சை மிளகாய்
- கொத்தமல்லி இலை
- உப்பு
- கால் டீஸ்பூன் மிளகுத்தூள்
- இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- எண்ணெய்
- ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
செய்முறை:
- முட்டையில் நான்கு எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவிற்கு உப்பு, மிளகுத்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
- கலந்து வைத்துள்ள மாவில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு உருண்டை பிடித்துக் கொண்டு வட்டமாக தட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடையை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் எஃக் வடை தயார். சாப்பிட சூப்பராக இருக்கும். இன்னிக்கு வீட்டில் செய்து அசத்துங்க.