“கல்விப்பணியை தொடர்ந்தால் மாணவர்களின் வருங்கால கல்வி சிறக்கும்..” எம்.பி.ஜிகே.வாசன் கோரிக்கை…!!
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது., அப்போது ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கையானது “இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசு கொடுக்கும் ஊதியத்தை கொடுக்க வேண்டும்., கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை வழங்க வேண்டிய ஒப்படைப்பு விடுப்பு பணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு வைக்கபட்டுள்ள தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும். உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு கொள்கைகளாக ஏற்று அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து அறிக்கையாக வெளியிட வேண்டும்.. முக்கியமாக தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு என்பதை ரத்து செய்து நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.. இதனால் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது..
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் பள்ளி வராண்டாவில் உட்காரக்கூடிய நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரு நாள் நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தால் சுமார் 70 சதவீத ஆசிரியர்கள் பள்ளிகளின் பணிக்கு செல்லாமல், பல பள்ளிகளில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பள்ளிகளை முழுமையாக இயக்கவும், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவும் முன்வர வேண்டுமே தவிர ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்ககூடாது. மேலும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களிடம் கால தாமதம் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒரு சுமூகமான நடவடிக்கையை மேற்கொண்டு கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கல்விப்பணியை தொடர்ந்தால் மாணவர்களின் வருங்கால கல்வி சிறக்கும்.
எனவே தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழக அரசு கடந்த தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களுக்கு அறிவித்த அறிவிப்புகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.