ஒரே இரவில் சம்பித்த சென்னை..!! பரிதவித்த பொது மக்கள்..!!
சென்னை மணலி துணைமின்நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக திருவொற்றியூர்., கொருக்குப்பேட்டை., வியாசார்பாடி., கொடுங்கையூர்., கோடம்பாக்கம்., மந்தைவெளி., கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதுடன்., கொளத்தூர் தொகுதியை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்..
சென்னை மாநகரமே நேற்று ஒரேநாளில் இருளில் சூழ்ந்து விட்டது என சொல்லலாம்., மணலி துணை மின்நிலையத்தில் நேற்று இரவு 1௦:3௦ மணிக்கு மேல் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் சென்னை மாநகரம் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது..
மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகள் :
திருவொற்றியூர்., கொருக்குப்பேட்டை., வியாசார்பாடி., கொடுங்கையூர்., கோடம்பாக்கம்., மயிலாப்பூர், மந்தைவெளி., கொளத்தூர்., திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம்,, தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, சூளைமேடு, மாதவரம், ராயபுரம் என பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கின.
வீட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சார சேவை துண்டிகப்ட்டது மட்டுமின்றி., தெருக்களிலும் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் மட்டுமின்றி இரயில் நிலையங்களிலும் மின்சார சேவை துண்டிக்கப்பட்டதால் இரயில் சேவைகள் நிருதபட்டது..
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் இயங்காததால்., மின்வாரியத்தை தொடர்பு கொண்டபோது பொதுமக்களின் அழைப்புகளை எடுக்காமல் நிராகரித்ததால் கோபமடைந்த பொதுமக்கள் மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்பாட்டத்தை களைய செய்தனர்., அதன் பின் மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து மின்சார சீரமைப்பு செய்தனர்
திருவல்லிக்கேணி, சேப்பாகம், புளியந்தோப்பு, ஆர்.ஏ புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் நகர்ப் பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, போரூர், மதுரவாயல், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..