உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு வளர்த்தனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி முனியம்மாள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த்தால் அவரின் கல்லீரல், கண்கள், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டு கோவை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்ததால் முனியம்மாள் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூரில் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலை சார்பாக இம்ப்காப்ஸ் 80 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மூலிகைக்கண்காட்சி மற்றும் இலவச சித்த மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார். இதில் சித்த மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களின் நோய்களை நாடி பார்த்து மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்இயங்கி வரும் உலக நாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் விதத்தில் விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சாராட்சியர் வாகேசங்கேத்பல்வந்த் கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
திருப்பத்தூர் அருகே காக்கங்கரை பகுதியில் கலைச்செல்வி என்பவரின் வீட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து 5 சவரன் தங்கநகை, 300 கிராம் வெள்ளிபொருட்கள் 50,000 ரூபாய் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..