கருடபகவான் வழிபாடு..!! இந்த நாளில் வழிபட மறக்காதீங்க..!
மனிதர்களுக்குள் மட்டுமல்ல கடவுள் களுக்குள்ளும் சில கட்டுப்பாட்டின் வார்த்தைகள் உண்டு.. என ஆன்மீக புராணகதையில் சொல்லப்படுகிறது.. அதை வித்தை என சொல்லப்படுகிறது..
வித்தை என்பது வித்தைகாரன் என அழைப்பார்கள் அதாவது எவர் ஒருவர் மற்றவரை தன்னுடைய சொல்லால் கட்டுக்குள் வைத்து இருக்கிறாரோ அவரை வித்தைக்காரன் என அழைப்பார்கள்.. அப்படியாக மஹாவிஷ்ணு வித்தைகாரன் என பல ஆன்மீக புராண கதைகள் சொல்லுகிறது..
மஹா விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவராகவும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுள்களில் ஒருவராகவும் விளங்குகிறார்..
மும்மூர்த்திகளில் ஒருவரான மஹாவிஷ்ணு மூவுலகையும் காக்கும் தெய்வமாக இருக்கிறார்..
அதேபோல், பறவைகளின் ராஜா என்று அழைக்கப்படும் கருடபகவான் திருமாலின் வாகனமாக இருக்கிறார்…
திருமாலின் வாகனமாக உள்ள கருடபகவானுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை திருமால் எடுத்துரைக்கும் புராண கதையே கருடபுராணம் ஆகும்.
இது இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணத்தின் சிறுகதையை இதில் பார்க்கலாம்.. வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடபகவானும் உரையாடுவது போன்ற காட்சிகள் மையப்படுத்தப் பட்டுள்ளது…
இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இனிவரும் நாட்களில் ஒவ்வொரு ஆன்மீக கதைகளை ஒவ்வொன்றாக படிக்கலாம்..
கருட பகவானுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு உண்டு என பல புராணகதைகள் உள்ளது. இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமாலின் வாகனமாக இருப்பவர் “கருடன்”. பறவைகளின் அரசானாக இருபவரும் “கருடன்”, அவர் மங்கள வடிவமாக திகழ்கிறார்.
நாக தோஷங்கள் நீங்கும்,
தோல் வியாதிகள் குணமாகும்,
திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்,
குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கும்,
தீராத நோய்களும் தீர்ந்து விடும்.
ஞாயிறு : நோய் நீங்கும்.
திங்கள் : குடும்பம் செழிக்கும்.
செவ்வாய் : உடல் பலம் கூடும்.
புதன் : எதிரிகளின் தொல்லை நீங்கும்.
வியாழன் : நீண்ட ஆயுளை பெறலாம்.
வெள்ளி : லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சனி : மோட்சம் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் மற்றும் குறிப்புகள் பரிகாரங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..