உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
மதுரையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர்கள் தின விழாவில் பேசிய முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. பெரிய தொகை தொடர்பான சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படுகிறது, எனவும் அதை மதுரை உயர்நீதிமன்றத்திலும் விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும என்று உத்தரவிட்டார்..
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் தேங்கி நிற்பதால் நகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு போதிய உபகரணங்களை உபயோகப்படுத்தி கழிவுநீர் கால்வாயில் சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மதிகோன்பாளையம் ஸ்ரீ மகாசக்தி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முனியப்பன் வழிபாடும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றி, பொங்கல் வைக்கும் விழாவும், மாவிளக்கு எடுக்கும் விழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், உள்ளூர் பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குதல், கோடைகால விடுமுறை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் குமரன் ,பாலமுருகன் ஆகிய இரண்டு பேரை உளவுத்துறை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞகள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலரை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தர குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வனிதாவையும் தரக்குறைவாக பேசிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி நேற்று காலமானதையடுத்து கருப்பு பேட்ச் அணிந்து கட்சி தோழர்கள் இரங்கலை தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டு 378 அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவிகளுக்கு வழங்கினார்கள். அப்போது பேசிய அவர் ஒவ்வொரு மாணவர்களும் மருத்துவர்களாகவோ, அரசியல் தலைவராகவோ தங்களுக்கு என்று ஒரு இலக்கு வைத்து அதை அடைவதற்கு முயற்சிகளும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..