சுய தொழில் செய்ய விரும்பும் அரசு பணியாளர்களுக்கு பாதி சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு அளித்து ஊக்குவிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 2 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து துபாயின் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் கூறுகையில், பல்வகை தொழில்களின் நோக்குகளை ஊக்குவிக்க அரசு ஊளியர்கள் சுய தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பாதி ஊதியத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு அளிக்கும் திட்டம் குறித்து அமைச்சரவைக்கு பரிசலித்ததாகவும் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில், சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓராண்டு முழுவதும் பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் வழங்கும் மாபெரும் வணிக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நமது இளைஞர்களை ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.