காய்கறிகள் இல்லாத பூண்டு தயிர் குழம்பு..!
வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சமையத்தில் என்ன குழம்பு வைக்கலாம் என்று கவலை கொள்ளும் நேரத்தில் இந்த பூண்டு தயிர் குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும். ரொம்ப ஈசியாக செய்துவிடலாம் அதேநேரம் சுவையும் ரொம்ப அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- ஒரு கப் தயிர்
- எண்ணெய்
- கடுகு
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- கருவேப்பிலை
- ஏழு பல் பூண்டு
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- இரண்டு பச்சை மிளகாய்
- ஒரு பெரிய வெங்காயம்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை:
ADVERTISEMENT
- ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் கடுகு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்தது மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு தேவையானது சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.
- இதில் தயாரித்த தயிர் கலவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி விட வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான தயிர் பூண்டு குழம்பு தயார்.
- இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இதனுடன் அப்பளம், வடை தொட்டு சாப்பிடலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.