தளபதி விஜய்க்கு பாஜக கண்டனம்..!! ஆதரவு தரும் திமுக..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை..?
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்., தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை அனைத்து கட்சி தலைவர்களும் விமர்சித்த நிலையில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தளபதி விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான தளபதி விஜய்., தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அவரின் இந்த செயலை அரசியலில் வந்த பின் அவர் முதல் முறையாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக . பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்..
தளபதி விஜயுடன் அவரது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர். பெரிய அளவில் நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் பொதுச்செயலாளர் ஆனந்த உடன் பெரியார் திடலுக்கு வந்த விஜய் தானே மலர் தட்டையும் மாலையையும் ஏந்தி வந்து மரியாதை செலுத்தியது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இணையத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்..
அதனை தொடர்ந்து தளபதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்..
இப்படி இருக்கையில் பாஜக சார்பில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.. அதாவது ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகளை சொல்லும் நடிகர் விஜய். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்களை சொல்லாதது ஏன் என தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
அதே நேரத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் திமுக உருபினர்களும், திமுக கூட்டணி கட்சியினரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். “தமிழக அரசியலை பொறுத்தவரை யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது.. பெரியாரை தொடாமலும் அவரை மீறியும் யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..